Monday, January 24, 2011

எடுப்பார் கைப்பிள்ளை


அடங்கி நடக்க அம்மா சொன்னார்
பின்னொருநாள் மனைவி சொன்னால் நான் தொடை நடுங்கி என்று

விரும்பாத ஒன்றை விரும்பி படிக்க அப்பா சொன்னார்
பின்னொருநாள் கனவில் வந்த என் பழைய கனவுகள் கை கொட்டி சிரித்தது

காதல் வந்த வேலையில் கவிதை எழுது என்றது இளவட்ட கூட்டம்
கவிதை கற்ற வேலையில் காதல் கிளி கழுதை மேல் ஏற்றப்பட்டது

கம்பியூட்டர் படி என்றான் நண்பன்
காலர் வைக்காத சட்டை பேசன் என்றாள் தோழி
காபி குடித்தால் சுகர் என்றார் டாக்டர்
கடன் வாங்கி வீடு கட்டென்றாள் மனைவி

வாழும் போதெல்லாம் என் வாழ்கையை சமுதாயம் வாழ்ந்தது
நன்றி பரம்பொருளே - சாவை மட்டும்" நான் " சாக கொடுத்தாய்

4 comments:

Anonymous said...

Ithuthaan life.Lot of people have this problem.
Be happy nanbaa.

கே.ஆர்.பி.செந்தில் said...

//என்றாள் தோழி//

இதை மட்டும் சரி பண்ணுங்க...

அசத்தல் கவிதை ....

Samudra said...

அருமை...

கோவை மு சரளா said...

உங்கள் எழுத்து எதார்த்தத்தை பிரதிபலிகிறது இன்னும் கூட செப்பனிட்டு கொடுங்கள் வாசகர்களுக்கு