Thursday, December 30, 2010

பெண்


பெயர்க்காரணம் சொல்வது கடினம்
பெயரே ஆரணம் ஆகியபடியால்

பிறவி ஊமை பேசமுடியாது
பெண் பேசுவாள்

இடப்புறம் இருப்பாள் அல்லது
வலப்புறம் இருப்பாள்
இருபுலங்கள் இணைவதில்லை

இவள் இன்னொருத்தி வாழ்க்கையை வாழ்பவள்
இன்னொருத்தி இவளை வாழ்பவள்

முரண்பாடு - ஆயுதம் தாங்கிய
நிராயுதபாணி அவள்

துரோகமும் காதலும் ஒரு சேர செய்வது
இவளுக்கு உரித்தான தனித்தன்மை

அழகான குழப்பம் அல்லது
குழப்பம் அழகானது

வள்ளுவனின் வார்த்தை
பெண் வழி சேறல்

ப்ராய்டின் வாதம்
பெண் ஒரு இருட்டு கண்டம்

ஐன்ஸ்டீனின் குழப்பம்
புரியாத புதிர்

ஓஷோவின் தியானம்
போகப் பொருள்

புகை பிடித்தல்
மது சுவைத்தல்
அவளின் இன்றைய போதை சிறியது

சமையல் சுகம்
பதி பக்தி
ஆபரண தாகம்
முகஸ்துதி மயக்கம்
புடவை மோகம்
புறம் பேசுதல்
டி வி சீரியல்
அவளின் நேற்றைய போதை கொடியது

ஏமாறாமல் ஏமாறுவாள் அல்லது
ஏமாற்றி ஏமாறுவாள்

6 comments:

விந்தைமனிதன் said...

ம்ம்ம்... ஓகே தான்!

கே.ஆர்.பி.செந்தில் said...

கவிதை??????

மாணவன் said...

வணக்கம், உங்கள் வலைத்தளத்தை எங்கள் பாசமிகு அண்ணன் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா)சிரிப்பு போலீஸ் அவர்கள் வலைச்சரத்தில்அறிமுகப்படுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்...

நன்றி
அண்ணன் சிரிப்பு போலீசுக்காக....
மாணவன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். வருகை தரவும்...
http://blogintamil.blogspot.com/2011/01/blog-post.html

சே.குமார் said...

Kavithai Arumai.

கோவை மு.சரளா said...

இது உங்களின் பார்வையில் என்று சொல்லுங்கள்
பெண் இதற்க்கு எல்லாம் அப்பாற்பட்ட சக்தி
அதன் மூலம் தான் வெளிவந்தீர்கள் அதன் மூலம் தான் இயங்குகிறீர்கள்
ஆனாலும் உங்களின் பார்வை இதை தாண்டி செல்ல முயலுவதில்லை
என்ன செய்வது ஆதங்கத்தை வெளிபடுதினேன் .................

ஆனாலும் சொல்லாடல் அருமை ...............