Sunday, December 26, 2010

பதிவரே - சற்று கவனியும்


இதை சொல்லியே ஆகவேண்டும் , அடக்கி வைத்த மூத்திரம் பெய்கையில் நாற்றமெடுக்கும் ,ம்ஹும் , விந்தை மனிதன் என்னுடைய பல வருட நண்பன் தான் என்றாலும் , அவருடைய சமீபத்திய பதிவு ஒன்று ( நல்ல வரவேற்பு அளிக்கப்பட்ட ) என்னை இப்படி எழுத தூண்டிவிட்டுவிட்டது .

பதிவர் பா.ராவும் ஒரு தோழியும்...

எங்கிருந்து அய்யா இது வருகிறது , நீர் நூறு பதிவு போட்டுவிட்டதால் , நாலு நண்பர் வட்டாரம் வந்ததால் , மரியாதை நிமித்தமாக சில விசயங்களில் உங்களை கலந்து கொள்வதால் இப்படி எழுதுவதா . கவிஞர் என்றால் "அது " இரண்டு இருக்க வேண்டுமா , ஆறு கோடி பெரும் எழுத நினைக்கும் ஆர்வத்தை ரசியுங்கள் , முயற்சியை பாராட்டுங்கள் , கிண்டலடிக்காதீர் , நீரும் அப்படித்தான் ஆரம்பித்தீர் , கொஞ்சம் பழசை அசை போடும் .

முதன் முதலில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனது பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றது . அன்று எங்கள் பள்ளி சார்பாக யாராவது கவிதை வாசிக்க வருவார்களா என்று அழைத்தபோது என்னை அனுப்பினார் எனது கணக்கு வாத்தியார் . அன்று அவ்வளவு கேவலமாக நான் வாசித்த கவிதையை அவர்கள் புகழ்ந்தனர் , இன்றும் என் சொந்த ஊருக்கு அவர்கள் நிகழ்ச்சி தபால் அனுப்பிய வண்ணம் உள்ளனர் . அவர்களின் இந்த முயற்சியின் காரணம் ஊக்குவிப்பு மட்டுமே .

கண்ணன் என எனக்கொரு அண்ணா உண்டு , அவர் படிக்காதவர் , எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தார் ,அதற்கு காரணம் சுந்தரனார் பல்கலைகழகத்தை சேர்ந்த தமிழாசிரியர் .அவர் பல முறை உம் போல் சிலரின் விமர்சனத்துக்குள்ளானாலும் , அவர் எழுதிய "ஆலமரம் " என்ற கதை படிப்பவரின் கண்களை குளமாக்கிவிடும்,அந்த கதைக்காக அவர் தமிழக அரசு விருது வாங்கியுள்ளார் , நல்ல வேளை அவரை உங்களுக்கு தெரியாது

இன்னும் சிலர் இங்கு உள்ளனர் . எழுத்துக்கு தோரணம் கட்டுபவர்கள் . சொல்ல வேண்டியதை நேராக சொல்லாமல் சுற்றி வளைத்து சொல்வதுதான் உங்கள் அகராதியில் பதிவர் அல்லது எழுத்தாளரா ?

பக்கத்தில் இருப்பவன் எனக்கு இம்சையை கொடுக்கிறான் என்பதற்கு , ஜப்பானிய துருப்புகள் இந்தோனேசியாவில் நுழைந்த போது ஹாலந்து நாட்டினரின் மனநிலையை போல் இருந்தது என எழுதுகிறார் நண்பர் ஒருவர் . ஐய்யா ,நான் உம் எழுத்தை மிக விரும்பி படிக்கிறேன் , உவமைக்கு ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை , சாப்பிட்டாயா என்ற கேள்விக்கு , அமெரிக்க பிரதமர் ரஷ்யாவில் விருந்து சாப்பிட்டபோது அதில் விஷம் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவருடைய ஐரிஸ் மெய்காப்பாலனை முதலில் சாப்பிட வைத்த போது எதிரில் உட்கார்ந்திருந்த மாட்ரிட் இளவரசர் சொன்னது போல எனக்கும் பசியில்லை என்று சொல்வது போல் உள்ளது . வெகு ஜனத்திற்கு புரியும்படி எழுதுங்கள் .

இதை பற்றி பேசும்போது , உனக்கு உலக அறிவு கம்மி , உனக்கு புரியல ,அதப்பத்தி எனக்கு என்ன , புரியறவங்க படிப்பாங்க என்று விதண்டாவாதம் பண்ணுபவர்கள் சிலர் . இப்ப என்ன புக் படிக்கிறீங்க ,என்ற கேள்விக்கு இன்று வரை எனக்கு கிடைத்த பதில என்ன வென்றால் , நான் அல்லது வெகு ஜன மக்களுக்கு அல்லது கூடவே இருக்கும் இன்னொரு பிரபல பதிவருக்கும் கூட தெரியாத புத்தகங்களின் பேர் சொல்வதே இவர்களுக்கு வேலையாகிபோயவிட்டது .

ஈழ பிரச்சினையை பற்றி எழுதி கண்ணீர் விட வேண்டியது , சரி ,அதற்காக ஒரு பைசா செலவு செய்தாயா அல்லது அவர்களை நேரில் ஒரு முறை கண்டு ஆறுதல் செய்தாயா - பக்கம் பக்கமாக அவர்களை பற்றி எழுதி நீ நல்லவனாக காட்டிகொல்கிறாய் - இந்த நீ என்பது சில பல மக்களை குறிப்பது .உங்கள் போதைக்கு ஈழ தமிழர் ஊருகாயாகிவிட்டனர்

தலைவர்களும், தொண்டர்களும் அப்புறம் மக்களும்..கே ஆர் பி

இவர் கொஞ்சம் சிரத்தை எடுத்து சொல்லுகிறார் , இவர் சொல்கிறது போல , இன்னொரு விஷயம் அரசியல் , ஒரு குரூப்பு அமைத்து கொண்டு மாற்றி மாற்றி ஓட்டு குத்தி கொள்வது ,எனக்கு நீ போடு ,உனக்கு நான் போடுறேன் , நான் பதிவுலகம் வந்து முழுதாய் ஆறு மாதம் கூட ஆகவில்லை எனக்கே இது எரிச்சல் தருகிறதே ,இதில் என்ன இருக்கிறதென்று சில பல வருடங்களாக இப்படி செய்து கொண்டே இருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை .
ஒரு பதிவராக இருக்க இந்த இந்த குவாலிட்டி இருக்க வேண்டும் என்று நீங்களாக தீர்மானித்து கொள்வது , புதிதாக வருபவனை எள்ளி நகையாடுவது , ஒருவருக்கொருவர் நன்றாக சொம்படித்துக்கொள்வது,யாரை பார்த்தாலும் இந்த புத்தகம் படி என்ற அறிவுரை சொல்லுவது , எப்போ பார்த்தாலும் புரியாத ஒரு புத்தகத்தை படிப்பதாக கூறிக்கொள்வது , ஏன் இப்படி மக்கா , ஆதரியுங்கள் , கோணல் மாணலாக எழுது பவனுக்கு சொல்லிதாருங்கள் ,ஆறு கோடி பேர் எழுதினாலும் உங்கள் இடம் உங்களுக்கே ஐய்யா ! புலவரே !

உங்களை புண் படுத்த அல்ல , செய்வதை கொஞ்சம் பக்குவமாக செய்யுங்கள் , நீங்கள் சொல்வதை நம்பும் கூட்டம் ஒன்று இருக்கிறது என்னை போல ,நல்ல திறமை உள்ள நீங்களே இப்படி செய்தால் எப்படி என்ற சின்ன கோபமே !

5 comments:

விந்தைமனிதன் said...

எலேய்.... அநியாயத்துக்கு பொங்குறியேடா! இந்தா வாரேன்

GSV said...

உண்மை அனைத்தும் உண்மை !!! பதிவர் என்பவர் எழுத்தாளர் அல்ல என்பதே எனது கருது.

கே.ஆர்.பி.செந்தில் said...

பொங்கலோ ...பொங்கல் ...

Rathi said...

எப்படி இந்தப்பதிவை தவற விட்டேன் தெரியவில்லை.

சில இடங்களில் யதார்த்தம். சில இடங்களில் தனிநபர் தாக்குதல் போல் தெரிகிறதே.

GSV,

உங்க சொந்த கருத்தை சொல்லியிருக்கிறீங்க, சரி. ஆனால், எழுத்தாளர் என்பதை நீங்கள் கொஞ்சம் வரையறுத்திருக்கலாம். எனக்கு தெரிந்து பதிவுலகில் அவரவர் கருத்துகளை, அறிந்ததை எழுதுகிறார்கள்.

நீங்கள் சொல்கிற எழுத்தாளர்கள் என்கிறவர்களுக்குரிய அங்கீகாரம் அவர்களுக்கு யார் கொடுத்தது. நீங்கள் சொல்லும் குறிப்பிட்ட "எழுத்தாளர்கள்" மட்டும் தான் பதிவுலகில் எழுதவேண்டுமா.

ஏண்ணே இப்பிடி :)

அர. பார்த்தசாரதி said...

"விந்தைமனிதன் said...

எலேய்.... அநியாயத்துக்கு பொங்குறியேடா! இந்தா வாரேன்//


நீங்க வரமாட்டீங்க மா பெரும் பஞ்சாயத்து பதிவரே

"GSV said...

உண்மை அனைத்தும் உண்மை !!! பதிவர் என்பவர் எழுத்தாளர் அல்ல என்பதே எனது கருது//


கருத்துக்கு நன்றி

//கே.ஆர்.பி.செந்தில் said...

பொங்கலோ ...பொங்கல் ...//


ஒரு தடவைதான் பொங்கல் வருகிறது

// Rathi said...

எப்படி இந்தப்பதிவை தவற விட்டேன் தெரியவில்லை.

சில இடங்களில் யதார்த்தம். சில இடங்களில் தனிநபர் தாக்குதல் போல் தெரிகிறதே. //


நன்றி , இது போல் அல்ல ,தனி நபர் தாக்குதலே தான்