Thursday, December 23, 2010

சோறும் சோறு சார்ந்த இடமும் - கோவில்பட்டி வட்டாரம்


கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை செல்லும் வழியில் வானரமுட்டி என்ற ஊர் உண்டு . அந்த ஊரிலிருந்து மூன்று மைல் தூரம் நடந்து சென்றால் வெயிலு கந்த புரம் என்ற ஊர் வரும் , இந்த ஊரில் தான் சமையல் கலையை கற்கும் ஆர்வம் எனக்கு வந்தது , என் அம்மா பிறந்த ஊர் அது , வெறும் மிளகாய் பொடியும் மஞ்சள் பொடியும் மட்டும் சேர்த்து நாட்டு கோழி குழம்பு வைப்பார்கள் என் பாட்டி , அந்த சுவை எந்த ஒரு மசாலா வை விடவும் மிஞ்சி விடும் அளவிற்கு இருக்கும் . சேர்க்க வேண்டியதை சேர்க்க வேண்டிய நேரத்தில் சேர்த்தால் நல்ல சுவை கிடைக்கும் என்பார் என் பாட்டி . என் அம்மா மட்டன் வறுவல் செய்தாலோ , குடல் குழம்பு வைத்தாலோ சுற்றி இருக்கும் பத்து வீட்டிலிருந்து டபரா கிண்ணி பறந்து வரும் . மட்டன் வறுவலை பொறுத்த வரியில் அதன் பச்சை வாசனையை நீக்கி , சம்பா வத்தலும் , தனியாவையும் , சீரகத்தையும் அதனுடன் கொஞ்சமாக வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து சிறிது நல்லெண்ணையில் வதக்கி அம்மியிலிட்டு மைய அரைத்து ஏற்கனவே அரைத்த இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் மற்றும் பட்டை சோமபில் வதக்கி எடுத்த மட்டன் கலவையோடு சேர்த்து மிதமான சூட்டில் வேக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் சுவையான மண மணக்கும் மட்டன் வறுவல் தயார் . இஞ்சி பூண்டு சீரகம் என மருத்துவ குணம் மிகுந்த பொருட்கள் கலக்கப்படுவதால் வயிற்றுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை .


கோவில் பட்டி , அசைவ பிரியர்களுக்கு பெரியசாமி ஹோட்டல் ஒரு நல்ல உணவகம் . அனைத்து வகையான அசைவ உணவுகளும் நல்ல தரத்துடன் வழங்கப்படுகிறது . மாலை நேரம் புரோட்டா சாப்பிடும் அன்பர்களுக்கு ஏ 1 புரோட்டா கடை கண்டிப்பாக பிடிக்கும் , இங்கும் உங்களுக்கு முட்டையில் செய்யப்படும் கரண்டி ஆம்லேட் மற்றும் வழியல் போன்றவையும் கிடைக்கும் . கோவில் பட்டி
கடலை மிட்டாய் ஒரு அருமையான இனிப்பு , மொரு மொரு வென்று கடித்து மென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் ஒரு சுகம் வரும் பாருங்கள் ....எம் எல் ஆர் , இந்த கடையில் இந்த மொரு மொரு கடலை மிட்டாய் கிடைக்கும் . கோவில் பட்டியிலிருந்து சாத்தூர் செல்லும் வழியில் வள்ளி மில் பஸ் ஸ்டாப் அருகே ஒரு பெயரில்லாத கடை உண்டு . எப்போதும் கூட்டம் மொய்க்கும் அந்த கடையில் என்னதான் விற்கிறார்கள் என்று ஒரு முறை எட்டி பார்த்தேன் . உளுந்து வடை க்குதான் அத்தனை போட்டி , அப்படி ஒரு உளுந்து வடை நான் இது வரை சாப்பிட்டது இல்லை . நா வில் வைத்த மறு கணம் கரைந்து விடுவது போல , எண்ணை குறைவாக , உளுந்த வடிக்க உரிய மணத்துடன் , கொஞ்சம் குழைவாக ,கொஞ்சம் முறைப்பாக , அந்த தக்காளி சட்னியுடன் தொட்டு சாப்பிடும்போது என்ன ஒரு சுவை . பை பாஸ் பயண வாதிகளே , மறக்காமல் ஒரு முறை எட்டி பாருங்கள்

சங்கரன் கோயில் பிரியாணி என்றால் ஓரளவு எல்லாருக்குமே தெரிந்தே இருக்கும் , சங்கரன் கோவிலுக்கு இப்படி ஒரு பெருமை கிடைத்தது சுல்தானியா பிரியாணி கடை யால் தான் . பதினொன்று மணியிலிருந்து ஒரு மணிக்குள் முடிந்து விடும் இங்கு பிரியாணி . உட்கார்ந்து சாப்பிடுவது கஷ்டம் அதனால் நிறைய பார்சல்கள் கட்டுவார்கள் . கூட்டம் அலை மோதும் .அப்படி என்ன இருக்கிறது ,இது என் நாவின் பதில் - இங்கு பயன்படுத்தப்படும் அரிசி சீராக சம்பா , பொதுவாக பிரியாணியில் நாம் பாசுமதி அரிசி தான் பயன்படுத்துவோம் இல்லையா , சீரக சம்பா வும் பிரியாணிக்கு மிக உகந்தது என்பது இங்கு சாப்பிட்ட பின் தான் அறிந்தேன் , இந்த கடையில் பயன்படுத்தப்படும் நெய் மற்றொரு காரணம் , இப்படி ஒரு மணம் கமழும் பிரியாணியை ஐதராபாத் பேரடைஸ் ஹோட்டலில் கூட கிடைக்காது . குற்றாலம் செல்லும் வழியில் நீங்கள் சங்கரன் கோயில் செல்ல நேர்ந்தால் இந்த கடையை மறக்காதீர்கள்

குற்றாலம் என்ற உடன் அருவிகளுடன் இன்னொரு இடமும் ஞாபகம் வருகிறது . பார்டர் புரோட்டா கடை .குற்றாலம் அருகே செங்கோட்டை கேரளா பார்டரில் ரஹ்மத் புரோட்டா கடை இருக்கிறது , இதை எல்லோரும் பார்டர் கடை என்றுதான் அழைக்கின்றனர் . குற்றாலத்தில் ஒரு நல்ல ஹோட்டல் இல்லையே என்பவருக்கு பார்டர் கடை பற்றி தெரியாது என்று அர்த்தம் . விருதுநகர் எண்ணை புரோட்டா போல இருந்தாலும் இங்கு சுவை வித்தியாசப்படுகிறது . வறுத்த கோழி , வறுத்த காடை போன்றவை பிரசித்தம் , சீசன் நேரத்தில் கூட்டம் அலை மோதும் , குறைந்தது ஒரு முப்பது முறையாவது இங்கு சாப்பிட்டிருப்பேன் , ஆனாலும் திகட்டாத உணவகம்

அடுத்து நம் அண்ணன் அஞ்சா நெஞ்சனின் கோட்டை , தலைநகர் மதுரை பற்றி அவர் சாப்பிட்டது போக உள்ள மிச்சத்தை அசை போடலாம்

7 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

சாப்பாட்டுக்கடை ...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

sorry. (naan) vegetarian.

அர. பார்த்தசாரதி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
சாப்பாட்டுக்கடை //
நன்றி ,சுவை மிக்கது//வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
sorry. (naan) vegetarian.//

நன்றி , அடுத்த பதிவில் சைவ உணவு விடுதிகள் பற்றியும் எழுதுகிறேன்

விந்தைமனிதன் said...

அதான் நாக்க அறுத்துப்போடச் சொல்லி டாக்டரு சொல்லிட்டாருல்ல...அப்புறமும் என்னலே நாக்கத் தீட்டிக்கிட்டு திரியிறே?!

விந்தைமனிதன் said...

//
//வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
sorry. (naan) vegetarian.//

நன்றி , அடுத்த பதிவில் சைவ உணவு விடுதிகள் பற்றியும் எழுதுகிறேன் //

நேயர் விருப்பம் :))))

Ramyasundarrajan said...

Athu MNR kadalai Mittai

கோல்ட்மாரி said...

அண்ணாச்சி , கோவில்பட்டி’ல பழைய பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்ப்புறம் சரஸ்வதி மெஸ்’னு ஒன்னு இருக்குது மறந்திட்டீயளோ ?

அங்கும் இரைவைக்கு சாப்பாடு நல்லா இருக்கும்..........