Sunday, December 19, 2010

குட்டி மகிழ்ச்சி


கையில் காசில்லாத போது -தேடி சென்று
பிச்சைக்காரர்களை திட்டி அனுப்புவதில்
ஒரு குட்டி ஆறுதல்

உச்சு கொட்டி ஓரமாக நடந்தாலும் -
ரத்தத்தில் குளித்த விபத்தான வண்டியை
எட்டி பார்க்கையில் ஒரு குட்டி திருப்தி

கண்களில் கண்ணியத்தை காட்டியபோதிலும் -
அவள் கடந்து செல்கையில்
மறைத்ததை தேடுவது ஒரு குட்டி குதூகலம்

தான் கண்ட உலக நாடுகள் பற்றி
மென்பொருள் நண்பன் பேசியபோது
அடுத்த ரிசஷன் எப்போது என்ற நினைப்பு
ஒரு குட்டி ஏக்கம்

கற்பழிப்பு காட்சியை
கனத்த இதயத்துடன் பார்க்கும் போது
இம்முறையாவது "அது " நடக்குமா என்பது
ஒரு குட்டி குரூரம்


மனம் குமுறி அழுதபோது -
நாளை இன்னொருவனும் என் போல்
அழுவான் என்ற எண்ணம்
ஒரு குட்டி மகிழ்ச்சி

3 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

இதுதான் குட்டி கவிதையோ ...

dineshkumar said...

குட்டி குடுவை கவிதை வானிலே

விந்தைமனிதன் said...

குட்டிக் கவிதைக்கு குட்டியா ஒரு கமெண்ட் போடலாம்னு பாத்தா குட்டிகுட்டியா மனசுக்குள்ள என்னன்னமோ ஒடுது...நல்லாருக்குன்னு குட்டியா ஒரே கமெண்ட் மட்டும்!