Sunday, December 12, 2010

சோறும் - சோறு சார்ந்த இடமும் - திருநெல்வேலி


திருநெல்வேலி என்றாலே எனக்கு கண் முன் வருவது தாமிரபரணி ஆறும் , செம்மண் நிலமும் தான் . திருநெல்வேலி என்றால் நமக்கு ஞாபகம் வருவது அல்வா தான் இல்லையா. எனவே நாம் அல்வா விலிருந்து ஆரம்பிப்போம் .

இருட்டுக்கடை அல்வா , எப்படி செய்கிறார்கள் என்பது இன்று வரை புரியாத புதிர், ஆனால் சுவை , நாவில் எச்சில் சுரக்க வைக்கும் சுவை , இன்னொரு விஷயம் சாதாரணமாக அல்வா வினால் ஏற்படும் அஜீரண பிரச்சினை இங்கு எட்டி கூட பார்ப்பதில்லை . இருட்டுக்கடை அல்லாது இன்னொரு கடையும் உண்டு , சாந்தி சுவீட்ஸ் , ரயில்வே ஜங்சன் அருகே உள்ள பல சில சாந்திகளுக்கிடையில் ஒரிஜினல் சாந்தியை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் தான் , ஆனால் கூட்டம் மொய்க்கும் கொஞ்சம் பழைய கடையாக தட்டுப்படும் சாந்தி கண்டிப்பாக உங்கள் கண்ணில் படத்தான் செய்யும் . இருட்டு கடைக்கு நிகரனான அல்லது ஒரு படி சுவை அதிகமான அல்வா சாந்தி சுவீட்ஸ் சிலும் கிடைக்கும் . கூட்டம் மற்றும் காத்திருப்பது இங்கும் ஒரு பிரச்சினைதான் , ரயில் நிலையம் அருகில் இருப்பது பிரயாணிகளுக்கு சவுகரியம் , கால் கிலோ பொட்டலங்களாக கிடைக்கும் இவற்றை வாங்கி கொண்டு எப்படியும் ரயிலை பிடித்து விடலாம்

மதிய வேளை , சைவ சாப்பாட்டிற்கு மண்பானை சாதம் கடை மிகச்சிறந்த இடம் . ஒரு குடிசை , அதனுள் நீளவாக்கில் இரண்டு டேபிள்கள் , பத்து இருக்கைகள் , பரிமாற இரண்டு மூதாட்டிகள் , கல்லாவில் உட்காராமல் ஊர்கதை பேசி சுற்றிகொண்டிருக்கும் முதலாளி . அசைவ பிரியனான நான் விரும்பி சைவம் சாப்பிடும் கடை இது . காரணம் செய்முறை தான் . கடையின் பெயருக்கு ஏற்ப இங்குஉணவுகள் மன்பானையிலேயே சமைக்கப்படுக்றது , வாழை இலையில் மண் பானை சோற்றுடன் ஒரு மனம் வரும் பாருங்கள் , சொல்லி மாளாது , இந்த சுவைக்கு ஈடு இணை கிடையாது . எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறுக்கு ஒரு பிரச்சினை வராது . கூடுதலாக நாம் வாங்கிகொல்வதற்க்காக வாழைப்பூ பொரியல் , அகத்தி கீரை பொரியல் , பாகற்காய் பொரியல் போன்றவை ஐந்து ரூபாய் வீதம் கிடைக்கும் . ருசிக்கு நான் கியாரண்டீ . விருந்தோம்பல் என்பதன் அர்த்தம் நமக்கு அறியச்செய்யும் ஒரு மண் வாசனை கடை . வண்ணாரப்பேட்டை பை பாஸ் சாலை ஓரத்தில் இந்த குடிசையை பார்க்கலாம் , கொஞ்சம் கூட்டம்தான் , பக்கத்திலேயே ஒரு டூபிளிகட் கடை கூட உண்டு ஜாக்கிரதை

அடுத்ததாக முத்து மெஸ் , இந்த முத்து மெஸ்ஸின் முதலாளி வள்ளலாரை கடவுளாக பாவிக்கும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர் . ஜன்க்சன் லிருந்து டவுன் செல்லும் வழியில் ஸ்ரீ புரம் என்ற இடத்தில உள்ள சைவ மெஸ் . இங்கு விசேசம் என்ன வென்றால் பரிமாறுபவர்களின் நடை உடை பாவனை உங்களை வடலூர் சத்திய தர்ம சாலைக்கு அழைத்து செல்லும் . இங்கு உணவு இயற்கை யான , ரசாயன கலப்பு ( பிளேவர் ) இல்லாத வகையில் சமைக்கப்படுகிறது, வயிறும் மனமும் நிறைந்து திரும்பலாம் , இன்னொரு விசேசம் என்ன வென்றால் , ஆறு நாட்களும் ஆறு வகை பத்திய ( டயட் ) சாப்பாடு . புதன்கிழமைகளில் இங்கு உளுந்து சாதம் என்பது கட்டாய சாப்பாடு . இந்த உளுந்து சாப்பாடென்பது பண்டை தமிழர்களின் கலாச்சாரம் , கலியாணம் செய்துகொள்ளும் மன மக்களுக்கு உளுந்து சாதம் வழங்கு வது ஒரு பழக்கமாகவே இருந்து வந்துள்ளதாம் , அதில்லாமல் உளுந்து சாதம் சாப்பிடுவதால் எலும்பு மஜ்ஜை , சவ்வு ( லிகமண்டு ) போன்றவை வலுப்படும் , முதுகு , இடுப்பு வலிகள் தீருமாம் . அந்த பழைய ரெசிபி இவர்களிடம் நீங்கள் காணலாம் . சாப்பாடு முடித்த வுடன் ஒரு இனிப்பு தருவார்கள் , இதிலும் எந்த வொரு பிலேவரும் கலக்கப்படாமல் இயற்கையாகவும் , சுவையாகவும் கிடைக்கும்

செம்மீன் , இது மட்டும்தான் திருநெல்வேலி யில் இருந்த நல்ல அசைவ ஹோட்டல் , நமது துர் அதிர்ஷ்டம் அந்த ஹோட்டல் மூடப்பட்டு விட்டது , இப்போதைக்கு நம்பி சாப்பிட " ஹோட்டல் வைர மாலை " பரவாயில்லை . இதில்லாமல் சாயந்தர வேளைகளில் ஆங்காங்கே கிடைக்கும் பொடி வடைகள் நல்ல ருசி .
அடுத்த பதிவில் நாம் கோவில்பட்டி சுற்று வட்டாரம் பார்க்கலாம்

7 comments:

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சுவையான தகவல், ஆனால் நிறைய எழுத்துப் பிழைகள். எடிட்டில் போய் சரி செய்யலாமே

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
This comment has been removed by the author.
ramyasundarrajan said...

Kovilpatty la MNR kadalai mittai super ah irukkum mama

GSV said...

தமிழ் நாட்டுல போக வாய்ப்பே கிடைக்காத ஒரே ஊர் திருநெல்வேலி... வீட்டுல என்னக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிதப்ப நான் சொன்ன முதல் ஊரும் இதுவே. அது நடக்காது இப்போ !!! just committed !!!:) . நல்லா இருக்கு.

Anonymous said...

//இந்த உளுந்து சாப்பாடென்பது பண்டை தமிழர்களின் கலாச்சாரம் , கலியாணம் செய்துகொள்ளும் மன மக்களுக்கு உளுந்து சாதம் வழங்கு வது ஒரு பழக்கமாகவே இருந்து வந்துள்ளதாம்//

உளுந்து is believed to provide stamina for sex. It is customary to provide உளுந்து vadai as mandatory evening snack for pudhu-mappillai when he visits his in-laws place(per *Panangaattu annachi* novel by late Stella Bruce)

கும்மி said...

ஜனவரி இறுதியில் திருநெல்வேலி செல்ல உள்ளேன். நீங்கள் சொன்ன அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துவிடவேண்டியதுதான்.

அர. பார்த்தசாரதி said...

Hi GSV sir,congrates,invitation undu thaana

//thanks ramya

//Thanks Mr anony for the input,sadangaana penkalukkum ulunthu tharuvaarakal

//kummi - thanks and please give feedback once you had food over there