Thursday, December 9, 2010

சோறும் - சோறு சார்ந்த இடமும் - சாத்தூர்


நான் வேலை செய்த முதல் நிறுவனத்தில் வேலைக்கான நேர்முகத்தேர்வு நடந்த போது " நீங்கள் மனம் விரும்பி , உங்களையே மறக்கும் அளவிற்கு எந்த வேலையில் ஈடுபடுவீர்கள் " என்ற கேள்விக்கு ,நான் உடனே சொல்லிய பதில் " சமைப்பதும் , சாப்பிடுவதும் "
நான் வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கு செல்பவன் , செல்லும் ஊர்களில் எது நல்ல ஹோட்டல் , எங்கு வயிறுக்கு பிரச்சினை வராது , எங்கு மண்வாசனையுடன் மணக்க மணக்க சாப்பிடலாம் என்று தெரிந்து வைத்துகொண்டு வெட்டு குத்தில் இறங்குவது வழக்கம்

சாத்தூர் :

நான் ஒன்பது முதல் பன்னிரண்டு வரை படித்த ஊர் . தினமும் கிடைக்கும் பைக்காசை சேர்த்து வைத்து கிரகம் ஹோட்டலில் புரோட்டா சாப்பிடுவது வழக்கம் . இன்று கிரகம் ஹோட்டல் சொல்லும்படி இல்லை என்றாலும் , சாத்தூரை பொறுத்த மட்டில் அசைவத்திற்கு நாடார் மெஸ் , சைவத்திற்கு தேவி விலாஸ் தான் . பிள்ளையார் கோவில் தெருவில் பழைய காலத்து வீடு ஒன்றில் தான் நாடார் மெஸ் நடத்தப்படுகிறது , இங்கு சாப்பாட்டுடன் ,ஒரு மட்டன் சுக்கா வாங்கி பிசைந்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே தெரியாத அளவு சாப்பிட ஆரம்பித்து விடுவோம் . பொதுவாக சாயந்தர வேளைகளில் தேன் மாவட்ட மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு புரோட்டா தான் .சாத்தூர் பை பாஸ் சாலையில் செட்டியார் கடை என்று கேட்டால் , ஒரு வெட்ட வெளி சாலையோர கடையை காட்டுவார்கள் .இங்கு புரோட்டாவிற்கு சைவ குழம்புதான் என்றாலும் , சுவையாக இருக்கும் . தமிழ் நாட்டில் முதன் முதலில் கரண்டி ஆம்லேட் கண்டுபிடித்தது இந்த கடைதான் . சுற்றிலும் மொரு மொறுப்பாக , உள்ளே கொஞ்சம் குழைவாக , காரம் உப்பு அளவாக சேர்த்து , தாளிக்கும் கரண்டியில் சுட்டு தருவார்கள் . இங்கு வரும் ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு கரண்டியாவது சாப்பிடுவார்கள் . கொஞ்சம் கூட்டம் அலைமோதினாலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது .
சாத்தூருக்கு பெருமை சேர்க்கும் இன்னொன்று சேவு , இதில் இரண்டு வகை உண்டு நடப்பு சேவு , நயம் சேவு . இரண்டுமே நன்றாக இருந்தாலும் உள்ளூர் காரர்களுக்கு நடப்பு செவென்றால் தான் இஷ்டம் .
உலக அளவில் பிரசித்தி பெற்றது சாத்தூர் வெள்ளரிக்கா , எந்த சீசனிலும் இங்கு வெள்ளரி பிஞ்சு கிடைக்கும் . பல வெளி நாடுகளில் இன்று பயன்படுத்தும் வெள்ளரிக்காய் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுவது தான் .

மதுரையில் இருந்து திருநெல் வேலி செல்லும் வழியில் விருதுநகருக்கு அடுத்து சாத்தூரை பார்க்கலாம் . சாத்தூர் வழி செல்லும்போது வெள்ளரிக்காய் , கரண்டி ஓம்லெட் , நடப்பு சேவு வாங்க மறக்காதீர்கள்
அடுத்த பாகத்தில் திருநெல்வேலி பற்றி பார்க்கலாம்

4 comments:

venkat said...

எப்பொழுதும் கிடைக்கும் வெள்ளரி பிஞ்சு - அதே சமயத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் பஞ்சம். இதையும் சேர்த்து சொல்லுங்கள், நண்பரே .
மணக்க வைத்த மண் வாசனை -பதிவு

காமராஜ் said...

நல்லா இருக்கு சோறும் சோறு சார்ந்த இடமும்.

விந்தைமனிதன் said...

லேய்! நல்லாத்தாண்டா இருக்கு. இன்னும் கொஞ்சம் உப்பு,புளி,மசாலா சேத்துக்க

GSV said...

உங்க ஸ்டைலே நல்ல இருக்கு நடத்துங்க.