Tuesday, December 28, 2010

விட்டில் பூச்சி - 2


காதல் கண்ட பின் தான் உணர்ந்தேன்
சந்நியாசி தான் நல்ல சம்சாரி என்று

புலியை கட்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டேன் -இனி
மாட்டை பூட்டுவது மடத்தனம்

எத்துனை அபத்தம் - கிளியிடம்
பச்சை நிறத்தை மாற்ற சொல்லி
மன்றாடிக்கொண்டிருக்கிறேன்

ஆந்தைக்கு இரவில் பார்வை உண்டு
ஏமாந்து போனேன்
இரவிலும் பார்வை உண்டு

காதல் என்பது நெருப்புதான்
நான் எப்படி விட்டில் பூச்சி ஆனேன்

1 comment:

Rathi said...

ம்ம்ம்.... காதல்ன்னு வந்தாலே எல்லாரும் விளக்கு, விட்டில்பூச்சின்னு ஆரம்பிச்சிடறீங்க. அந்த ஆமைப்படம் காதல் கவிதைக்கு பொருந்தல என்பது என் கருத்து.

ஆனா, கவிதை நல்லா இருக்குங்கிறத மறுக்க முடியல.