Friday, November 26, 2010

நன்பேண்டா


வாங்கும் முன்

"மாப்ள உன் கையுலதாண்டா என் வாழ்க்கையே இருக்கு "
" இந்த உதவி நீ செய்யலேனா , நான் நடுத் தெருவுக்கு வந்துருவேண்டா "
" யாருட்டயாவது கடன் வாங்கியாச்சும் குடுறா "
" ஒரே வாரத்தில கொடுத்துருவேண்டா "
" எனக்கு வேற யாரையும் தெரியாதுடா "
" சத்தியமா சொன்ன தேதிக்கு முன்னாடியே தந்துருவேன் "
" தற்கொலை செய்யறதத்தவிர வேற வழியே இல்லடா "

வாங்கிய பின்

"அவன மாதிரி ஒரு பிரண்டு , சான்சே இல்ல மாப்ள "
" அருமையா பாடுறான் தெரியுமா "
" அவன பாத்தாலே எனக்கு சந்தோசமா இருக்குடா "
" என்னோட ஒரே ஆறுதல் அவன்தான் "
" எனக்குன்னு ஒருத்தன் இருக்கான்டா "

தரும் முன்

" டே மாப்ள , வண்டி ஒட்டுறேண்டா , ஒரு பத்து நிமிசத்துல கூப்பிடுறேன் "
" இல்ல மச்சான் இன்னொரு லைன்ல முக்கியமான கால் பேசிட்டு இருந்தேன் "
" மாப்ள சார்ஜு கம்மியா இருக்குடே , இப்பவே கூப்பிடுறேன் "
" 100 % நாளைக்கு தர்றேன் மாப்பள "
" வரவேண்டிய இடத்துல இருந்து வரல டா, நாளைக்கு வேற ஏதாவது பண்றேன் "
" ஆளு என்ன பாக்க வந்துகிட்டே இருக்கான் , மூணு மணிக்கெல்லாம் அக்கௌண்ட்ல போட்டுருவேன் "
"நான் அவனுக்கு தான் டயல் பண்றேன் , கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன் "
" உங்கள் அழைப்பு பார்வோர்ட் செய்ய படுகிறது "
" நீங்கள் டயல் செய்த என் தற்போது சுவிட்ச் ஆப் செய்ய பட்டுள்ளது "

தந்த பின்

" அவன் திமிரு புடிச்சவன்டா "
" பணத்திமிரு மனுசன எப்பிடியெல்லாம் மாத்துது பார் "
" மனுசங்கள சம்பாதிக்கலையே "
" பணத்தையும் சேத்தா தூக்கிட்டு போகபோறாங்க "
" அவன் சோத்துக்கு இல்லாமதான் சாவான் பாரு "
" அவன்கிட்ட காசு வாங்குனதுக்கு பதிலா நாலு பேருக்கு ......."

6 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

எல்லாப் புகழும் .....ராமனுக்கே!

வெறும்பய said...

பணத்தினால் குணமும் மாறுகிறது என்பது உண்மை தான்..

அர. பார்த்தசாரதி said...

senthil sir,karpooram mathiri paththikireengale

விந்தைமனிதன் said...

வேணாம்டா! அழுதுடுவேன்!

விந்தைமனிதன் said...

இதுக்குத்தாண்டா ப்ளாக் எளுதுறவங்கிட்டயெல்லாம் கடன் வாங்கப்பிடாதுங்கிறது...!

GSV said...

//எல்லாப் புகழும் .....ராமனுக்கே// Super ....