Tuesday, November 30, 2010

நடை பாதை நாயகர்


தார் கடலின் கரையில் நின்று
வாகன மீன் பிடிப்பவன் நான்

ஒரு நொடி வியாபாரம் என்னை வாங்க
ஒரு நாள் விலை கொடுத்தவன் நான்

நான் வாழ்வது கோடிகளில் -
வாடிக்கையாளர்களும் வாழுமிடமும்

பலரின் பரிகசிப்பில் என் மனம் அழும்
சிலரின் பரிதாபத்தில் என் தன் மானம் அழும்

நகர்தலும் நகர்த்துதலும் நகராமல் உள்ளன
நான் கண்ட நகரத்தின் பெயர்க்காரணம்

நேற்று வராத மழையின் மண் வாசம்
இன்று வரும் நாயர் கடை பஜ்ஜி வாசம்
நிர்ணயிக்கின்றன
நான் விற்கும் பொருட்களின் விலையை

2 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

தொழிலை கவிதை ஆக்குவது சிரமம்.. ஆனால் சிறப்பாக பதிவு செய்து உள்ளீர்கள் ...

அர. பார்த்தசாரதி said...

KRP Senthil San,Thanks for the comment