Saturday, November 27, 2010

நில் - கவனி


அதிகாலை நடைபயிற்சி
நடக்கும் பாதங்கள் , ஓடும் எண்ணங்கள்

என்னை பார்த்து கொண்டே எதிரே ஓடிவரும் என் நண்பன்
ஓடவில்லை , மிதக்கிறான்

சைக்கிளில் செல்லும் " இன்றே இப்படம் கடைசி "
ஹோண்டாவில் செல்லும் " காதல் ஓவியம் "
கவாசாகி சுமக்கும் " வெளிநாட்டு ரம் "
சுசிகியில் போகும் " சப்த ஸ்வரங்கள் "
டை கட்டி நடக்கும் " விண்ணப்ப படிவங்கள் "
பூச்சி மருந்தை சுமந்து செல்லும் தொழிலதிபரின் பென்ஸ்
மாருதியில் மையம் கொண்ட சாப்ட்வேர் புயல்

கிளட்ச் பிடித்தலும், ப்ரேக் மிதித்தலும்
அலையும் மனதிற்க்கிடையே
அனிச்சை செயலாகிப்போனது


இந்திய சாலைகள் பலவீனமானது ,
செல்லும் வாகனங்களால் அல்ல
சுமக்கும் சோகங்களால்

6 comments:

KANA VARO said...

நல்ல கவிதை

கே.ஆர்.பி.செந்தில் said...

பிரமாதமான கவிதை .. கடைசி மூன்று வரிகளில் கணம் கூடுகிறது .. பாராட்டுக்கள்...

அர. பார்த்தசாரதி said...

Thanks,Krp sir,KANA VARO

விந்தைமனிதன் said...

கடைசி மூன்று வரிகளில் ஒளிந்திருக்கின்றது கவிதை!

Cable Sankar said...

konjam edit panninaal nalla irukkumnu thonuthu.. even though it's nice

அர. பார்த்தசாரதி said...

thanks vmanithan and cable sankar sir