Friday, October 8, 2010

ஒரு கணம்


பச்சை விளக்கிற்காக காத்திருந்த நொடிகளில்
எதையோ எண்ணி நான் தொலைத்த ஒரு கணம் .- பதற்றம்

பாடம் கேட்டுகொண்டிருந்த வகுப்பறையில்
மனம் மாயமாகிவிடும் ஒரு கணம் - பயம்

நண்பனிடம் பேசிக்கொண்டே இருக்கையில்
நான் மறந்து விட்ட ஒரு கணம் - வெட்கம்

ரயிலில் பயணிக்கையில் ,கண்கள் திறந்துகொண்டு
எதிருள்ளவரை பார்த்துக்கொண்டு நிசப்தமான ஒரு கணம் - தூக்கம்

எவ்வளவோ யோசித்தும் புலப்படவில்லை ,
தொலைந்த கண்களில் நான் என்ன யோசித்தேனென்று

ஆனால் தொலையும் கணங்கள் இன்றும் தொடருகின்றன,

தொடரும் வாழ்வில் ஒரு வெற்றிடம் போல் , மலரும் தொலையும் சுக கணங்கள்

7 comments:

S.Sudharshan said...

தன்னிலை மறப்பதில் ரசனையை உணருகிறேன் .. வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...

தொலையும் கணங்களில் வாழ்வை ருசிக்க வைத்த கவிதை ,,

VELU.G said...

//மலரும் தொலையும் சுக கணங்கள்
//
அருமையான வரி

நல்ல கவிதை

விந்தைமனிதன் said...

கணங்களில் புதைந்திருக்கின்றன வாழ்வின் ரகசியங்கள்!

GSV said...

Super !!!

கோவை மு.சரளா said...

** எதார்த்தத்தின் எல்லைகள்
வாழ்வின் தொல்லைகள்

** தொலைக்க முடியாத
அந்த கணங்கள்
மறுக்கவும் முடியாது

அதை அழகாய் கோர்வையாக்கி கொடுத்ததற்கு மகிழ்ச்சி தொடர்ந்து எழுதுங்கள்

அர. பார்த்தசாரதி said...

Thanks for the comments.