Saturday, October 16, 2010

தவளை மனிதன் - பௌலோ கொள்கொவின் குட்டிகதை - 6


தன் மகன் எதையுமே தெளிவாக செய்வதில்லை , எதிலும் மெத்தனம் , எந்த ஒரு விசயத்தையும் நாளை பார்க்கலாம் என்ற எண்ணம் கொண்டவனாக இருக்கிறான் , இந்த சோம்பேறித்தனம் அவனை எங்கு கொண்டு செல்லுமோ என்று குழம்பி இருந்தார் ஒரு தந்தை . மலை மேல் இருக்கும் ஒரு முதியவர் எதையும் செய்யும் வல்லமை படைத்தவர் என்று கேள்வி பட்டு, அவரை தரிசித்து வரும்படி மகனாய் அனுப்பிவைத்தார் .
மகனும் அப்பா சொல்படி முதியவரை சந்தித்தான் . முதியவரோ அவனிடம் இரண்டு தவளைகளை பிடித்து வரும்படி கட்டளை இட்டார் . அவனும் அவ்வண்ணமே இரண்டு தவளைகளை பிடித்து முதியவரிடம் கொடுத்தான் . இரண்டு தண்ணீர் குடங்களில் அந்த தவளைகளை போட்டு வைத்தார் முதியவர் .பின்னர் ஒரு குடத்தை அடுப்பில் வைத்து தீ மூட்டினார் . இப்போது அந்த இளைஞனை பார்த்து "தம்பி தண்ணீரை தொட்டு பார் " என்று வினவினார்
"தண்ணீர் மிதமான சூட்டில் உள்ளதய்யா " என்றான் அவன் ,

"தவளை என்ன செய்கிறது ?" என்று கேட்டார் .

"தவளை நீந்தி விளையாடுகிறது அய்யா " என்றான் அவன் .

சிறிது நேரம் கழித்து அதே கேள்வியை கேட்டார் பெரியவர் , அவனும் பதில் கொடுத்து கொண்டே இருந்தான் . முடிவில் தண்ணீர் கொதித்தது , தவளை செத்து மிதந்தது .

" தம்பி ! நம்மை சுற்றி நடக்கும் , நம் மீது திணிக்கப்படும் சில விஷயங்கள் பழகிபோய்விடுகிறது , எனவே இன்று நடக்கும் ஒரு பிரச்சினை உன்னை பாதிப்பதில்லை , நேற்றைய பிரச்சினையை விட கொஞ்சம் பெரியது என்று தான் நமக்கு தோன்றும் இந்த தண்ணீர் சூடாவது போல் , நீ செய்யவேண்டிய காரியங்களை தள்ளி தள்ளி போட்டால் , கொஞ்சம் வேப்பம்தானே என்று தவ்வுவதை தள்ளி போட்ட இந்த தவளை போல செத்து மிதக்க "வேண்டியிருக்கும் "என்று கூறி இன்னொரு பானையில் இருந்த தவளையை எடுத்து கொதிக்கும் நீரில் போட்டார் , அது உடனே தவ்வி ஓடி பிழைத்தது . இப்போது அந்த இளைஞனின் முகத்தில் ஒரு தெளிவு பிறந்ததை பார்க்கமுடிந்தது

3 comments:

விந்தைமனிதன் said...

எனக்குச் சொல்ற மாதிரியே எப்டி மாப்ள தேடி எடுக்குற இந்த கதையெல்லாம்?? ம்ம்ம்ம் நல்ல விஷயம் மாப்ள. நடத்து நடத்து.

GSV said...

//எனக்குச் சொல்ற மாதிரியே எப்டி மாப்ள தேடி எடுக்குற இந்த கதையெல்லாம்??//

Repeatuuu

GSV said...

//" தம்பி ! நம்மை சுற்றி நடக்கும் , நம் மீது திணிக்கப்படும் சில விஷயங்கள் பழகிபோய்விடுகிறது , எனவே இன்று நடக்கும் ஒரு பிரச்சினை உன்னை பாதிப்பதில்லை , நேற்றைய பிரச்சினையை விட கொஞ்சம் பெரியது என்று தான் நமக்கு தோன்றும் இந்த தண்ணீர் சூடாவது போல் , நீ செய்யவேண்டிய காரியங்களை தள்ளி தள்ளி போட்டால் , கொஞ்சம் வேப்பம்தானே என்று தவ்வுவதை தள்ளி போட்ட இந்த தவளை போல செத்து மிதக்க
"வேண்டியிருக்கும் "//

ஒவ்வொரு இந்தியனும் தினமும் படிக்க வேண்டிய வரிகள்....