Monday, September 6, 2010

உன் பெயர் என்ன " மனிதனா " ?

செல்லமே ! என் கைகள் நடுங்குகிறது ! என் கண்களை நீ பார்க்கையில் !

என் பெயர் சொல்லி நீ அழைத்த போதெல்லாம் , அத்துணை அழகானதா என் பெயர் என்று வியந்ததுண்டு ! உன் பெயர் சொல்லி அழைக்க ஓராயிரம் முறை ஒத்திகை பார்த்து தோற்றவன் நான் .
வீட்டுத்தோட்டத்தில் தக்காளி செடிகள் நடுவே முளைத்த களைகளை அகற்றிகொண்டிருந்தேன் ,
களைகள் ! அதுவும் இறைவனின் படைப்பு தானே ! எங்கோ பிறந்து ஏதோ தின்று இங்கு எச்சமிட்டு , தானே கருவுற்று பிறந்த செடி யன்றோ ! எத்தனை போராட்டங்களுக்கு நடுவே அது முளைத்திருக்க வேண்டும்
இடம் பார்த்து பூமியில் எதுவும் பிறப்பதில்லையே ! தன் இனம் தழைக்க தோன்றிய ஒரு உயிரை , என் சுய நலத்திற்க்காக நான் எப்படி பறிப்பது ! இங்கு ஜனிப்பதற்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை பறிப்பதற்கு நான் யார் ? காட்டில் முளைத்தால் ரசனைக்குரியதாகும் நீ , நீ என் தோட்டத்தில் முளைத்ததால் எப்படி களை ஆனாய் . எவ்வளவு அழகாக , சின்ன சின்ன மொட்டெடுத்து , சிரித்து அழைக்கிறது இந்த செடி ! இதனை பறித்தால் நான் கொலைகாரன் , பறிககாவிடில் பைத்தியக்காரன்
எனை கல்விக்காக பயிரிட்டபோது , முளைத்த காதல் களை நீ ! அழகாகத்தான் நீயும் துளிர்த்தாய் , சில்லென சிலிர்த்து , இரு கை இலைகளை விரித்து , ஆழமாய் வேர் விட்டு , இதழ்களில் பனித்துளி சுமந்து , அதில் படும் சின்ன ஒளி கீற்றை ஆயிரம் வண்ணத்துகள் களாய் சிதறடித்து , நெட்டி நிமிர்ந்து , சிரித்து திணற விட்டாய்
விவசாயியை நிராகரிக்கும் களை - காதல் , ஏனென்றால் காதலில் உனக்கு பிடிக்காத பட்சத்தில் நானுமொரு களை தானே
நீ கிளித்துபோட்ட பயணச்சீட்டை முகர்ந்து ரசித்த என்னை புத்தியற்றவன் என எவரும் ஏசுவதில்லை
உன்னுடன் பேசுவதை நினைத்து , என்னுடன் பேசிக்கொண்ட பொழுதுகளில் , திடீரென தொற்றிகொள்ளும் ஒரு இனம் புரியா சோகம் , சோகமும் சுகமும் காதலில் ஒன்றுதான் போலும்
இதோ ! நீ என்னோடு சேர்ந்து காலத்தை கட்டிபோட்டு விட்டாய்!
உனக்கு என்னில் பிடித்தது எதுவென அறியேன் ! அறியவும் விரும்பேன் ! அறியும் பட்சத்தில் என் காதலின் எடை அறிவது போல் அன்றோ அது
என் உள்ளங்கை தேவதையே ! நான் பேசியது உனை கவருவதரக்கல்லவே! எப்படி மறந்தாய் அவற்றை !
ஊர் பேசியது உண்மை தான் - நீ ஒழுக்கம் தவறினாய் என்று !
உனை காதலித்து மரணத்தை மன்னித்தவன் நான் ! புறம் பேசும் இம்மக்களை மன்னிக்கமாட்டேனா
ஒழுக்கம் - இவர்கள் தரும் விளக்கம் தான் என்ன ?
உடலிலேயே இருந்துவிட்டால் விசமாகும் மலத்தை வெளித்தள்ளுதல் ஒழுக்கக்கேடா
நீ மனிதன் - உன் வகை என்ன ! அறிவியல் என்ன சொல்கிறது உன்னை பற்றி , மேதைகள் எப்படி சொன்னார்கள் உன்னை பற்றி - பிறப்பில் நீ பல புனர் தேடும் பிறவி தானே - உடல் கேட்கும் பசியில் ஒன்றுதானே கலவி
யார் போட்ட முடிச்சிது - காதலும் கல்வியும் ஒருவனுடனே என்று

பொய் என நீருபிக்கபட்டதை - ஏன் கட்டி காப்பாற்றுகிறாய்!

காதலுக்கு எதிபார்ப்புகள் கிடையாதே , எதிர் பார்க்கப்படின் அது காதலே இல்லையே

சரணடை - முற்றிலும் சரணடை - காதலின் மந்திரம் உன் காதில் விழவில்லையா

உடல் சொல்லி மனம் செய்தல் தவறாகாது பெண்ணே ! மனம் சொல்லி உடல் செயதால்தான் தவறு

உன் உடல் சொல்லி செய்த செயலுக்கு , ஏனடி மனம் சொல்லி தவறிழைத்தாய்

" விடையில்லா கேள்வி ஒன்று உண்டு - இந்த பிரபஞ்சத்தில்
இந்த பெண் என்னதான் விரும்புகிறாள் " - பிராய்டுநீ எதை விரும்பி மரணித்தாய்! நீ இழைத்த தவறென்ன - என்னை விட்டு சென்றதைத்தவிர

என் மனக்குளத்தில் நீ விட்டெறிந்தது- கல்.
சலசலப்பு ஓய்ந்து , சமநிலை அடைந்தது
ஆயினும் இன்னும் ஒரு ஓரத்தில் நீ எறிந்த கல் - காதல்

நம் மனங்கள் வாழ்கிறது - அதை வாழ்விக்க நான் வாழ்வேன் - ஒவ்வொரு நொடியும் உன்னோடு

நான் காலத்தை கட்டி போட்டவன் - எனக்களிக்கப்பட்ட பெயர் : "மன நோயாளி "
காலத்தை கழித்து வாழும் உனக்கு பெயர் என்ன ? " மனிதனா "

1 comment:

விந்தைமனிதன் said...

//அழகாகத்தான் நீயும் துளிர்த்தாய் , சில்லென சிலிர்த்து , இரு கை இலைகளை விரித்து , ஆழமாய் வேர் விட்டு , இதழ்களில் பனித்துளி சுமந்து , அதில் படும் சின்ன ஒளி கீற்றை ஆயிரம் வண்ணத்துகள் களாய் சிதறடித்து , நெட்டி நிமிர்ந்து , சிரித்து//

நல்ல வர்ணிப்பு....

//உனக்கு என்னில் பிடித்தது எதுவென அறியேன் ! அறியவும் விரும்பேன் ! அறியும் பட்சத்தில் என் காதலின் எடை அறிவது போல் அன்றோ அது //

"விரல்கள் பார்த்துக் கொஞ்சம் வந்தது" பாடல் நினைவுக்கு வருகிறது.

//அதை வாழ்விக்க நான் வாழ்வேன் - ஒவ்வொரு நொடியும் உன்னோடு //

பாவம் அந்தப் பரிதாப ஜீவி....

ஆங்காங்கே தெறிக்கும் மின்னல்கள்... ஒன்றாய்க் கோர்க்கும் போது ஏதோ ஒரு இழை குறைவதுபோல இருக்கிறது