Friday, September 3, 2010

அவன் என் நண்பன்

அப்படித்தான் சொல்கிறான் ! அப்படித்தான் சொல்கிறேன் !

முதல் முறை பார்த்தபோதே தெரிந்து கொண்டேன் அவன் முட்டாள் என்று ! ஆனால் ,
ஒவ்வொரு முறையும் நான் தான் முட்டாளாகுகிறேன்,ஆக்குகிறான் ,

ஆயினும் அவன் என் நண்பன்

எனக்கு தெரியாத விஷயங்கள் பேசுகையில் , அவன் ஆதிக்கவாதியாவான் !
எனக்கு தெரிந்ததை பற்றி பேசுகையில் , நான் அரைவேட்காடு ஆவேன் !

ஆயினும் அவன் என் நண்பன்

ஜோசியம் பயின்றான் சுடுகாட்டில் ,
துணை இயக்குனர் ஆனான் சினிமாவில்
கோ .ப . செ என்றான் ஒரு அரசியல் கட்சியில்
இன்று வியாபாரியாம் அவன் சென்னையில்

மாறிக் கொண்டே இருப்பது அவன் இயல்பு
மாறித் தொலையாதது என்னுடன் கொண்ட நட்பு

அவன் குழப்புகையில் தெளிவாக குழம்பும் நான்
அவன் தெளிவடைய செய்கையில் குழப்பத்துடன் தெளிவாவேன்

"முட்டாளுடன் முட்டாளே சேருவர் ! " என்பதை ஆணித்தரமாக மறுக்கிறேன் ,
அவனை சுற்றி அய்யகோ அறிவாளிகளின் கூட்டம்

உயிர் போனாலும் கடன் வாங்கவே மாட்டான் !
திருப்பிகொடுத்தால்தானே வாங்கியது கடனாகும் !

எனக்கு அவன் தேவையற்ற சுமை , தேவையான தொல்லை

ஏனென்றால் ,

அவன் என் நண்பன்

3 comments:

ராஜாராமன் said...

டேய் மாப்ள, யார்றா அந்த நாதாரி? சொல்லு பினாட்டிடுவோம்! (யப்பாடா நான் தப்பிச்சிட்டேன்!)

கே.ஆர்.பி.செந்தில் said...

எப்படி தலைவா இம்மாதிரி இம்சையை பொறுத்துக்கொள்கிறீர்கள்..

GSV said...

:))))