Wednesday, September 8, 2010

பௌலோ கோல்கோ வின் குட்டி கதை - 1

பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார் , வழக்கமான வணக்கங்களை முடிந்தவுடன் ஒரு 500 ரூபாய் நோட்டை கையில் எடுத்தார் . பின் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அடை பார்க்கும் வகையில் தூக்கி காட்டினார் .
என் கையில் இருப்பது ரூபாய் 500 தாள் . இன்று இந்த 500 ரூபாயை யாருக்காவது தருவதென முடிவு செய்துள்ளேன் என்று அறிவித்து அனைவரையும் ஒருமுறை நோட்டம் விட்டார்
சரி ! உங்களில் யாருக்கு இந்த 500 ரூபாய் தாள் வேண்டும் ? விருப்பம் உள்ளவர்கள் கையை தூக்கி காட்டுங்கள் ! என்றார்
வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் கைகளை தூக்கினர்

இப்போது , அந்த தாளை கைகளால் நன்றாக கசக்கி விட்டு மறுபடியும் கேட்டார் "இப்போது யாருக்கு வேண்டும் இந்த நோட்டு "

அனைவரின் கைகளும் உயர்ந்தது

இப்போது , அந்த தாளை முகத்திற்கு நேராக காட்டி , காரி அதன் மீது உமிழ்ந்தார் , மீண்டும் அதே கேள்வி "இப்போது யாருக்கு வேண்டும் இந்த நோட்டு "

மீண்டும் அனைவரின் கைகளும் உயர்ந்தது

இம்முறை அந்த தாளை கீழே போட்டு தன்னுடைய ஷு கால்களால் மிதித்துக்கொண்டே கேட்டார் "இப்போது யாருக்கு வேண்டும் இந்த நோட்டு "

மீண்டும் அனைவரின் கைகளும் உயர்ந்தது

பேராசிரியர் ஒரு சின்ன பேரு மூச்சுடன் பேச ஆரம்பித்தார் " மாணவர்களே ,இன்று உங்களுக்கு நான் எடுக்கும் பாடம் இதுதான் . ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு உண்டு . உனக்கும் ஒரு மதிப்பு உண்டு , உன்னை யார் வேண்டுமானாலும் திட்டலாம் , கிண்டல் செய்யலாம் , காரித்துப்பலாம் , காலின் கீழிட்டு மிதிக்கலாம் , ஒன்றை மட்டும் மறக்காதே , உனக்கென உள்ள மதிப்பு ஒருபோதும் குறையாது இந்த 500 ரூபாய் நோட்டு போல"

2 comments:

விந்தைமனிதன் said...

குட்டிக்கத நல்லாருக்கு... இந்த மாரி இங்கிலீசு பொஸ்தகம்லாம் நெறைய படிச்சி நறுக்குன்னு கத சொல்லோணும்

GSV said...

Super !!!நல்லா கருத்து உள்ள கதை. ரொம்ப யோசிக்க வச்ச கதையும் கூட.