Wednesday, July 28, 2010

யார் இந்த வேணுகோபால் ?

வேணுகோபால் மற்றும் சங்கீதா
இளைஞர்களுக்கிடையே இப்பொழுதெல்லாம் சற்று பிரபலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கப்படும் ஒரு பெயர் வேணுகோபால் மற்றும் சங்கீதாபெயற்காரணம் மிக எளிதான ஒண்று. நடிகர் மயில் சாமீ ஒரு திரைபடத்தில் "ஐ ஆம் வேணுகோபால் பிரோம் டைடல் பார்க் " என்று காமெடி பண்ணுவார் . அதிலிருந்துதான் வேணுகோபால் என்ற பெயர் பிரபலமாகியது
வேனுகோபல்களை நீங்கள் எளிதில் அடையலாம் தெரிந்துகொள்ள சில விவரங்கள் உங்கள் கவனத்திற்கு

1 பொதுவாக கம்பெனி கொடுத்த அடையாள அட்டையை (tag),கர்ணனின் கவசகுண்டலம் போல் எப்போதும் அணிந்துகொண்டிருப்பார்கள் (கக்கூசில் கூட)
௨.விலை உயர்ந்த இசைத்தட்டு ,பிளேயர் கள் (Ipod) கட்டாயமாக இவர்களிடம் இருக்கும், அதோடு அலைந்துகொண்டே இருப்பதோடு,அதில் மேல் நாட்டு பாடல்களோ அல்லது இந்தி பாடல்களோ அல்லது எது அவர்களுக்கும் நமக்கும் புரியாத மொழியோ ,அந்த பாடல்களை விரும்பி கேட்டுக்கொண்டிருப்பார்கள்

3.பயணங்களின் போது அரைகால் சட்டை (short pant/trousers) ,பாக்கெட் வைத்த பேன்ட் , டி சர்ட் அணிந்திருப்பார்கள்

4.பேசுகையில் இரண்டுக்கு ஒன்று வீதம் ஆங்கிலம் கலந்து பேசுவார்கள் , தமிழை மிக கடினமான மொழிபோல் பேசுவார்கள்

5 உங்கள் தொலைபேசி அலைபிற்க்கு , சத்தமாகவோ அல்லது இறைட்சலுடனோ பேசிக்கொண்டே " ஆம் இன் எ பார்ட்டி " என்றாலோ ,
மிகவும் பவ்யமாக, அக்கறையாக , அமைதியாக பேசி "ஆம் இன் ஆபீஸ் என்றாலோ
ஜாவா,ஆரக்கிள்,ப்ராஜெக்ட்,டெலிவரி,ஆன் சைட் ,அமெரிக்கா என்று உங்களுக்கு சம்பந்தமே இல்லாததை பேசிக்கொண்டு " ஆம் இன் ஏர்போர்ட் ,டிரைன் " என்றாலோ , கவனிக்க - நீங்கள் பேசுவது வேணுகோபலுடன்

6 பத்து பேர் நடுவே ஒட்டாமல் நிர்ப்பார் , லிப்ட்டில் ஏறியவுடனே கடிகாரம் பார்ப்பார் , பஸ் உள்ளே கூட கூலிங்க்ளாஸ் அணிவார் , ஜாக்கிரதை - வேணுகோபால்

7 .ஐஸ்க்ரீம் சாப்பிட பச்கின்ஸ் & ராபின்ஸ் க்கு மட்டும்தான் செல்வார்கள் ( முதல் தடவை கேட்ட போது ஓட்டல் பெயர் என்று தான் நினைத்தேன் )

8 .பெண்களிடம் நிதானமாகவும் , ஸ்டைலாகவும் பேசி பஞ்சாயத்து முடித்து வைப்பார் ,பெண்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும்

9.கடும் கோடைகாலத்திலும் அசிங்கம் பார்க்காமல் ஓவர் கோட் அணிவார்

10 வருமான வரி தள்ளுபடிக்காக , எப்படி முதலீடு செய்வதென்று நாள் முழுக்க பேசுவார், ஆனால் வருமான வரி வீதம் என்ன என்று கூட அவருக்குத்தெரியாது

11.பேரம் பேசாமல் , கேட்கிற வாடகை குடுத்து வீடு எடுப்பார்


12 4000 ரூபாய் வருமான வரி சலுகைக்காக ,கடனுக்கு வீடு ஒன்று வாங்கி, அதற்க்கு 6000 ரூபாய் வட்டி கட்டுவார் பெருமையுடன்

13 விலை உயர்ந்த (Branded) பொருட்களையும் , துணிகளையும் பயன்படுத்துவார்

14 ரயில் பயணத்தில் , இவரை மடிக்கணினியும் (Laptop) கையுமாக பார்க்கலாம்

15 கூலிங்க்ளாஸ் , அடிடாஸ் / நிக்கே ,வூட்லாந்து காலணிகள் , கார்கோ பான்ட் இவை கண்டிப்பாக இவரிடம் இருக்கும்


16 ஹாட் டாக் , பிட்சா ,பேஸ்த இன்னும் வாயில் நுழையாத அயிட்டங்களை விரும்பி சாப்பிடுவார்

17 சை ! ஒரு மண்ணும் புரியல ! என்று குழம்பியதுண்டா ? இரு வேணுகோபால்கள் பேசும்போது பக்கத்தில் இருந்து பாருங்கள்

18 அடிக்கடி இந்திய போக்குவரத்து, அரசியல்வாதிகள்,பொல்லுசன் போன்றவற்றை வெறுப்பதாக சொல்வார்

இன்னும் எவ்வளவோ இருந்தாலும்,மேல் கூறியவையே வேனுகோபால்களை பற்றி உங்களுக்கு விளக்கமளித்திருக்கும் இதே குணாதியங்களுடன் உள்ள பெண்களை சங்கீதா என்று அழைக்கப்படுகின்றனர் . குறிப்பான பெயர்க்காரணம் இல்லாவிட்டாலும் வேணுகோபாலுக்கு பொருத்தமான ஜோடி "சங்கீதா" என தோன்றியதால் அந்த பெயரே நிலைத்துவிட்டது

5 comments:

Jutson Devasahayam said...

good one really enjoyed reading it

மதுரை சரவணன் said...

நல்ல ஆய்வு.... ரெம்ப பெரிய ஆளுங்க நீங்க...பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

parthasarathy said...

மிக்க நன்றி திரு Jutson Devasahayam , திரு மதுரை சரவணன்

GSV said...

இத எழுத ஆரம்பித்த உடனேயே அதுவா வந்து கொட்டி இருக்குமே :)))))

அர. பார்த்தசாரதி said...

same blood gsv sir