Saturday, May 29, 2010

ஒரு கவிதை

வெற்றுப்பக்கங்களை விரகத்துடன் பார்க்கிறது
விரல்களுக்கிடையில் வேசியாகிறது
பேனா குடித்த போதை ஆகிறது
புரியாதவன் நாக்கில் முளைத்த மயிராகிறது

Saturday, May 22, 2010

திறந்தால் வலி / திறந்தாள் வழி

மூடப்படாத என் மனதோரக்கதவின் , தொலைந்து போன சாவி நீ

Saturday, May 8, 2010

மோக முள்

குத்தாத முள் காதல் என்றால்
நீ ரோஜா

Saturday, May 1, 2010

மன்னிப்பு

உனை மணந்து நான் மரணத்தை மன்னித்துவிட்டேன்

மனைவி

உனை நானறியாது , எனை நீயரியாது , ஒன்றானோம்
ஆண் மகனாய் யோசித்தால் , அடிக்கடி எரிச்சல் வருகிறது
சமுதாய கண்ணோடு நோக்கினால் , விவாததுக்குரியவலாய் தோன்றுகிறது
பெற்றவரின் மகனாய் பார்த்தால், பிடிவாதக்காரியாக தோன்றுகிறது
காதலனாய் யோசித்தால், காதல் உன் வீட்டு பாசத்திடம் பிச்சை எடுப்பதுபோலாகிறது
நண்பனாய் யோசித்தால், நான் மட்டும் நல்லவன் என தோன்றுகிறது
கணவனாய் யோசித்தால், ஏனடி கண்ணீர் வருகிறது ?

வெட்டிபய

சோத்துல கை வைக்கப்போனா ,
சொறி நாயீ ஒன்னு சொரிஞ்சிட்டு போச்சு
காத்துல கல்ல நான் விட்டா ,
குறி மாறி குறி மேல தாக்கிட்டுபோச்சே
சேத்துல நான் தெரிச்சோட,
வெறியோட தறிகெட்டான் கல் வாங்கி கண்ணன்
பொழப்பெல்லாம் பொறம்போக்கு ஆச்சு ,
இந்த புண்ணாக்கு யாவாரம்
உனக்கேண்டா ராமா